கல்லூரியில் படிக்கும்போதே வீதியில் இறங்கி போராடியவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என டி.ஆர்.பி.ராஜா அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பி.ராஜா, "மிக குறுகிய காலத்தில் உதயநிதி துணை முதல்வராக வந்துவிட்டார் என கூறுகிறீர்கள். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனின் திருமணத்தை எதிர்த்து லயோலா கல்லூரியில் படிக்கும்போதே வீதியில் இறங்கி போராடியவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்" என்று கூறியுள்ளார்.