நத்தம் அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்

5833பார்த்தது
நத்தம் அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்
மதுரை மாவட்டம் மேலூர் கற்பூரம்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 62). இவர் தனது மனைவி அழகம்மாள், மகன் அழகுபிரகாசுடன் நத்தம் சமுத்திராபட்டிக்கு பைக்கில் வந்தார். பின்னர் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். சம்ப பட்டி பிரிவு அருகே சென்ற போது திண்டுக்கல்லில் இருந்து வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இளங்கோவன் மற்றும் அழகுபிரகாஷ் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசுஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி