பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா

65பார்த்தது
திண்டுக்கல் மலையடிவாரம் பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மலையடிவாரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா 11 ஆம் தேதி கொடியேற்றமும் 12-ஆம் தேதி பூச்செறிகளும் நடைபெற்றது. நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீட்டில் இருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் வைபவம் சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் நடைபெற்றது. காளி வேடம் அணிந்தும் அக்னி சட்டி எடுத்தும் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குளியில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஓம் சக்தி கோசத்துடன் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குளியில் இறங்கினர். தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் எடுத்து கங்கை சென்றடையும் வைபவம் நடைபெறுகிறது. 22 ஆம் தேதி பிற்பகல் அன்னதானம் மாலையில் ஊஞ்சல் உற்சவமும், 23ஆம் தேதி தெப்ப திருவிழாவுடன் விழா நிறைவடைகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத் தலைவர் பாண்டி சேது வருகிறார்.

தொடர்புடைய செய்தி