கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து: CCTV காட்சிகள்

59பார்த்தது
ஆபத்தை உணராத பலர் வண்டியை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அது போலத்தான் திருவண்ணாமலை அருகே செய்யாறில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பைரவபுரத்தில் டூவிலரில் வந்த ஒருவர் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில் சில அடி தூரங்களுக்கு தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் அந்த நபர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: சன் நியூஸ்