திண்டுக்கல் - Dindigul

எஸ். பி வீட்டின் சுவற்றில் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் ஏர்போர்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் மற்றும் சந்தோஷ் இவர்களின் இருவரும் நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து பாலகிருஷ்ணாபுரம், ரவுண்ட் ரோடு, தாலுகா காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளனர். வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையில் எதிரே இருந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இல்லத்தின் சுவற்றில் மீது வேகமாக மோதி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி ஜெகதீஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் சந்தோஷ் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்

திண்டுக்கல்
Sep 23, 2024, 04:09 IST/திண்டுக்கல்
திண்டுக்கல்

எஸ். பி வீட்டின் சுவற்றில் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு

Sep 23, 2024, 04:09 IST