எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் கொலை

38655பார்த்தது
எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் கொலை
கடலூர் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமதில்வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந் 7 பேர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி