மதுரையில் தேர்தல் புறக்கணிப்பு - கலெக்டர் எடுத்த நடவடிக்கை

59பார்த்தது
மதுரையில் தேர்தல் புறக்கணிப்பு - கலெக்டர் எடுத்த நடவடிக்கை
மதுரை, திருமங்கலம் அருகே உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிகளை சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெறுவதால் சுற்றியுள்ள ஐந்து கிராமங்களில் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழ பாதிப்பும் உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகிறது என கூறி அவர்கள்தேர்தலை புறக்கணித்தனர். இதையடுத்து, உர ஆலையை மூட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார். மேலும் சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஆய்வு செய்து அறிக்கையளிக்க உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி