திண்டுக்கல்: கடைகளில் போலீசார் திடீர் சோதனை
திண்டுக்கல் ASP. சிபின் உத்தரவின் பேரில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் திண்டுக்கல் பழனிரோடு, பெரியகடை வீதி, மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல சரக்கு கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் வேறு ஏதேனும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திடீர் சோதனை மேற்கொண்டனர்.