டிடி தமிழ் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவரணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னையில் உள்ள டிடி தமிழ் அலுவலகம் முன் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி, செயலாளர் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் பங்கேற்ற நிலையில், திமுக மாணவரணியினர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.