இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் உயிரிழப்பு

81பார்த்தது
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட மலையப்ப நகரை சேர்ந்தவர் கருணாகரன் இவரது மகன் ரமேஷ் இவருக்கு வயது 35 இவர் பாலக்கோட்டில் இருந்து காவேரிப்பட்டணம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பயணம் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே நேரத்தில் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள கத்தேரி கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் மகன் கணேஷ் குமார் என்பவர் காவேரிப்பட்டினத்தில் இருந்து பாலக்கோடு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

ஏர்ரசீகலஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவருக்கும் தலை மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் பலத்த அடி விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இது குறித்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக காரிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தது அடுத்து சம்பவ இடத்திற்கு காரிமங்கலம் காவல்துறையினர் விரைந்து சென்றனர் அங்கு இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஒரே நேரத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :