கடத்தூர் பகுதியில், நேற்று வெற்றிலை வாரச்சந்தை நடைபெற்றது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதி சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர். இங்கு மணியம்பாடி, நல்ல குட்டலஹள்ளி, கோம்பை, அஸ்தகியூர், முத்தனூர், கேத்திரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி, வேப்பிலை பட்டி, காவேரிபுரம் மற்றும் சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் வெற் றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த னர். கடந்த வாரம் ஒரு மூட்டை வெற்றிலை 128 கட்டுகளைக் கொண்டது ஆரம்ப விலை ₹8 ஆயிரம் முதல் அதிகபட்சம் ₹11. 500 வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில் ஆரம்ப விலை ₹7 ஆயிரம் முதல் ₹10. 000க்கு விற்பனை யானது. கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று ₹1500 விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் 30க்கும் மேற் பட்ட வெற்றிலை மூட் டைகள் விற்பனை நடை பெற்றது. நேற்று ஒரே நாளில் ₹3 லட்சத்திற்கு விற்பனையானது