தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று பாமக சார்பில் அரைநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூரில் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற பாமக உழவர் பேரியக்கத்தின் தலைவரும் முன்னாள் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான இல. வேலுசாமி தலைமையில் இன்று காலை கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் அரசாங்கம், மாநில இளைஞர் அணி செயலாளர் பிரண்ட்ஸ், முன்னாள் நகர் செயலாளர் கந்தன் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய கிளை செயலாளர்கள் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.