தர்மபுரி: கோவிலூரில் அன்பிய பகுதி திருப்பலி வழிபாடு

60பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்டு கோவிலூர் கிராமத்தில் அமைந்துள்ளது புனித சவேரியார் திருத்தலம் அமைந்துள்ளது. இன்றைய தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலிகள் நடைபெறுவது வழக்கம் தற்போது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நோன்பு தினத்தை கடைப்பிடித்து வரும் சூழலில் கோவிலூர் சவேரியார் தேவாலயத்தில் 11 அம்பியன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு பகுதி வாரியாக பகுதி திருப்பலி தற்போது நடைபெற்று வரும் சூழலில் நேற்று ஏப்ரல் 09 தோமையார் அன்பியம் சார்பாக பகுதி திருப்பலி சிறப்பாக நடந்தது. இந்த திருப்பலியை பங்குத்தந்தை ஆரோக்கியசாமி நிறைவேற்றினர். உடன் அருட் சகோதரர் பாடல் குழுவினர் மற்றும் தோமையார் அன்பியத்தை சார்ந்த குடும்பத்தினர் முன் நின்று வழிநடத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி