கோவிலூர் சவேரியார் பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி

58பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம் பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூர் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் பேராலயம் அமைந்து ள்ளது. இங்கு புத்தாண்டு பிறப்பையோட்டி நேற்று நள்ளிரவு 11: 30 மணியளவில் சிறப்பு கூட்டுப் பாடற் திருப்பலி நடைபெற்றது. மேலும் இன்று காலை 8: 30 மணி அளவில் பங்குத் தந்தை அருட்பணி ஆரோக்கியசாமி, மற்றும் உதவி பங்கு தந்தை அருட்பணி லிபியன் ஆரோக்கியம், மற்றும் திருத்தொண்டர் ஆல்வின் ஆகியோர் கூட்டு பாடற் திருப்பலி நிறைவேற்றினர்.

இதில் இறை செய்தியாக இந்த ஆண்டு அன்பு, அமைதி, சமாதானம், இரக்கம் உள்ளிட்ட அனைத்து இறைவனின் கொடைகளும் முழுமையாக பெற இறைவனை பிரார்த்திப் போம் என்று தெரிவிக்கப் பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த திருப்பலியில் பங்கேற்றனர். மேலும் திருப்பலி முடிவில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி