அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் 8வது மாவட்ட கூட்டம்

60பார்த்தது
தர்மபுரி அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 8வது மாவட்ட பேரவை கூட்டம் தர்மபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் தீர்மானங்களாக சத்துணவு அங்கன்வாடி ஓய்வு ஊதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7, 850 வழங்க வேண்டும் 70 வயது ஓய்வு பெற்றவர்களுக்கு பத்து சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் கமுடேசன் பிடித்தம் செய்யும் கால அளவுகளை 12 ஆண்டாக குறைக்க வேண்டும் மருத்துவ காப்பீடு திட்ட குளறுபாடுகளை கலைந்து விட வேண்டும். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து வேண்டும் பழைய ஓய்வூதியம் அமல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி