தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அடுத்த எர்ரசீகலஅள்ளி ஊராட்சி அத்திகுட்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய இரண்டாவது மகள் சுகுணா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி பகுதியை சேர்ந்த தம்பிதுரை என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தம்பிதுரை காரிமங்கலம் பகுதியில் பீடா கடை தொழில் செய்து வருகிறார். திருமணமான நாளில் இருந்து தற்போது வரை தனது கணவருடன் தந்தை வீட்டிலேயே வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சுகுணாவிற்கு அடிக்கடி தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த அவர், இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைசெய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்