விருத்தாசலம்: பெண் திடிரென உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பழமலைநாதர் நகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி ரேவதி இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ரேவதிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரேவதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரேவதி இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.