கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான காவல் துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பரவளூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அதில் அங்குள்ள பெட்டி கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது உறுதியான நிலையில் பரவளூரை சேர்ந்த ராமசாமி மகன் துரைசாமி என்பவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.