கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, கடலூர், நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி, கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகமாக காணப்பட்டது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்கையில் கடந்த ஒரு வாரமாக கந்த சஷ்டி விரதம் என்பதால் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை. தற்போது கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றதால் மக்கள் கூட்டம் அலைமோதியது என தெரிவித்தனர்.