கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று வேட்டக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேட்டக்குடியைச் சேர்ந்த விஸ்வநாதன், ஆனந்தகுடி கிழக்கு தெருவை சேர்ந்த பரந்தமன் ஆகியோர் சாக்கு மூட்டையில் ஆற்று மணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.