கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கீழ்குப்பம் தெற்கு காட்டுகொட்டாய் கிராமத்தை தமிழ்மணி மகன் விக்னேஷ் (வயது 22) என்பவர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள தொண்டாங்குறிச்சி கிராமத்திற்கு மரம் வெட்டும் வேலைக்கு வந்தவர் குளிப்பதற்கு அருகிலுள்ள கிணற்றில் இறங்கும் போது தடுக்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் வேப்பூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.