கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் மாதந்தோறும் முதல் புதன்கிழமை அன்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும், 2 ஆம் புதன் கிழமை சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், 3 ஆம் புதன்கிழமை விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில்நுட்ப கல்லூரியிலும் 4 சிறப்பு மருத்துவர்களை கொண்டு ஒற்றை சாரள முறையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில் நுட்ப கல்லூரியில் நடை பெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நிர்வாக காரணங்களால் இன்று (புதன்கிழமை) முதல் விருத்தாசலம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது. இதில் விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.