பண்ருட்டி - Panruti

பண்ருட்டி: மணல் கடத்திய லாரி பறிமுதல்

பண்ருட்டி: மணல் கடத்திய லாரி பறிமுதல்

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே எலந்தம்பட்டு கெடிலம் ஆற்று பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மணல் கடத்தி செல்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து புதுப்பேட்டை காவல் துறையினர் எலந்தம்பட்டு பகுதியில் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கெடிலம் ஆற்றில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி வந்த நபர்கள் காவல் துறையினரை கண்டதும் லாரியை நடுவழியில் விட்டுவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதை காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


హైదరాబాద్