கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் மற்றும் முத்து மாரியம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு கோவிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுற்றியுள்ள பகுதிகளில் லட்சதீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.