கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் தீபாவளி அமாவாசையை முன்னிட்டு இன்று மூலவர் ஸ்ரீ சரநாராயண பெருமாள் பட்டு உடைகள் அணிந்துக் கொண்டு ஆஸ்தான சேவையாக காட்சியளித்தார். இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.