கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கிராமத்தில் புதிதாக எழுந்தருளியுள்ள 21 அடி முருகனுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இது மட்டும் இல்லாமல் கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல் தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.