மக்களுடன் முதல்வர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்கள் கொடுக்கின்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம்
திருத்துறையூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை ஆத்மா குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர், அண்ணாகிராமம் ஒன்றிய கழக செயலாளர் வி. கே. வெங்கட்ராமன் கலந்து கொண்டு, பொது மக்களிடம் இருந்து அனைத்து துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்று உடனடி தீர்வு காணும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்,