இந்திய தேசிய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் நகர கழக செயலாளர் க. இராஜேந்திரன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜாகிர் உசேன் நகர மன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் தலைமை ஆசிரியர் ஆலம்பர் செல்வம் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்