கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் காட்டுசாகை கிராமத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் 7 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.