கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் மழைநீர் நீர் தேக்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.