ஓட்டுனர் நலசங்கம் பெயர் பலகை: அமைச்சர் கணேசன் திறப்பு

83பார்த்தது
ஓட்டுனர் நலசங்கம் பெயர் பலகை: அமைச்சர் கணேசன் திறப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கல்லூர் கூட்டு சாலையில் மங்களூர் ஒன்றிய சேர்மன் கே என் டி சுகுணா சங்கர் தலைமையில் ஏபிஜே அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் நலசங்கம் பெயர் பலகை திறப்பு மற்றும் புதிய உறுப்பினர் அட்டை சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் கலந்துகொண்டு ஏபிஜே அப்துல் கலாம் ஓட்டுனர் நல சங்கம் பெயர் பலகையை திறந்து வைத்து ஆட்டோவை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி