Dec 23, 2024, 17:12 IST/புவனகிரி
புவனகிரி
கடலூர்: காவலர் சம்பளம் தொகுப்பு குறித்து விளக்கம்
Dec 23, 2024, 17:12 IST
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் வழிகாட்டுதலின்பேரில் காவலர் திருமண மண்டபத்தில் காவலர்களுக்கு கடலூர் மஞ்சக்குப்பம் பாரத ஸ்டேட் பாங்க்(SBI) வங்கியின் கிளை மேலாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் காவலர்களுக்கு காவலர் சம்பளம் தொகுப்பு (Police Salary Package)-ல் பயன்கள் குறித்து எடுத்துக்கூறினார்கள்.
SBI-ல் கணக்கு வைத்துள்ள காவலர்கள் தங்களது வங்கி கணக்கு போலீஸ் சேலரி பேக்கேஜ் (PSP) ல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். PSP பேக்கேஜில் உள்ள வங்கி பயனாளர்களுக்கு விபத்து காப்பீடாக SBI வங்கியின் மூலம் 70 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. விபத்தினால் ஏதேனும் உறுப்புகள் நிரந்தரமாக செயலிழந்தால் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இயற்கை மரணங்களுக்கு Yono App மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருட்செல்வன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.