கடலூர் அடுத்த சாவடி அருகே உள்ள குட்டையில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதையடுத்து நேற்று காலை முதல் இரவு வரை ராட்சச மோட்டார் மூலம் குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் தொடர்ந்து 2 வது நாளாக குட்டையில் இருந்த தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.