கடலூர், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர், கம்மியம்பேட்டை, கோண்டூர், நத்தப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (டிசம்பர் 21) அதிகாலை 2 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் அடுத்த கோண்டூர், காவேரி நகர் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.