ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் பகுதி மக்களுக்கு அரசு அறிவித்த ரூ. 2000 நிவாரணம் மற்றும் துவரம் பருப்பு, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் அடுத்த எஸ். என் சாவடி நியாய விலை கடையில் விடுபட்ட மக்களுக்கு இன்று நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டது.