கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா கடந்த 22 ஆம் தேதி துவங்க நேற்று 31 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று இரவு கடலூர் சாரல் கலைக்கூடம் மாணவர்களின் பரதம், சிலம்பம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் சாரல் கலைக்கூடம் மாணவி மோகன சங்கரியின் பரதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.