
புவனகிரி: சூதாட்டம் 4 பேர் மீது வழக்கு
கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தாமரைக்குளம் தெரு புற்றுமாரியம்மன் கோவில் பின்னால் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் வீரமணிகண்டன், பாலமுருகன், வெற்றி ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து இவர்களிடம் இருந்து 52 புள்ளித்தாள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.