புவனகிரி: அங்காளம்மனுக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி

51பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயான சூறை உற்சவத்தை முன்னிட்டு அம்மனுக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. அங்காளம்மன் நகர் பகுதி பொதுமக்கள் அம்மனுக்கு பூ மாலை, பழம், பட்டாடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சீர் எடுத்து ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தனர். பின்னர் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி