புவனகிரி: அங்காளம்மன் கோவிலில் தேரோட்டம்

85பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது இந்த ஆலயத்தில் மாசி மாத மயான சூறை உற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு விழாக்கள் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது அதில் ஒரு பகுதியாக தேர் திருவிழா நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் தேரில் அமர்ந்து மகா தீபாரதனையுடன் தொடங்கி புவனகிரியின் முக்கிய வீதிகள் வழியை சிவ வாத்தியங்கள் முழங்க சிவன் பார்வதி நடனத்துடன் பவனி வந்தார் அப்பொழுது வழியங்கும் பொதுமக்கள் அம்மனை மனமுருக வழிபட்டனர் இதனை தொடர்ந்து மீண்டும் தேர் ஆலயத்தில் முடிவடைந்தது இதில் புவனகிரி சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி