கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் முரட்டு வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வெட்டுக்காயங்களுடன் நீரில் மிதந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மஞ்சக்கொல்லை பகுதியில் அமைந்துள்ள முரட்டு வாய்க்காலில் நீரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்து கிடந்துள்ளது தகவலை அறிந்த மருதூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தனர் இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தகவலின் பெயரில் வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மிதந்து கிடந்த ஆண் சடலத்தை மீட்டு அமரர் உறுதி மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நீரில் மிதந்து கிடந்த சடலம் நடுத்தரமான வாலிபர் வயது நபர் என்பது தெரிய வருகிறது மேலும் இரண்டு கால்களிலும் வெட்டு காயங்களுடன் பிணமாக நீரல் இறந்து கிடந்துள்ளது என்பதும் தெரிய வருகிறது மேலும் இறந்த சடலத்திலிருந்து அவரது செல்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை போலீசார் கைப்பற்றினர் இறந்தவர் யார் என்பது எந்தப் பகுதியை சேர்ந்தவர் என்பதும் குறித்து மருதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.