கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு பகுதியில் அழிச்சிக்குடி பகுதியைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் இளையராஜா என்பவர் இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது மினி டாட்டா ஏஸ் வாகனம் மோதி சாலை விபத்தில் சிக்கினார். இந்த நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் தற்பொழுது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.