புவனகிரி: அங்காளம்மனுக்கு சாக்லேட் அலங்காரம்

51பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்திரை 1 தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு அம்மனுக்கு சாக்லேட் அலங்காரம் செய்து தீபாரதனை காட்டப்பட்டது இதில் மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வகை சாக்லேட் இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோன்று தோரணங்களும் சாக்லேட்டால் அலங்கரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க அம்மனுக்கு பஞ்சமுக தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இதேபோன்று பரிவார தெய்வங்களுக்கும் சாக்லேட் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது இதில் புவனகிரி சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக வந்து சுவாமியின் சாக்லேட் அலங்காரத்தை கண்டு ரசித்து அம்மனின் அருளாசி பெற்று சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி