கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சி ஆலம்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. அப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது அதனை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் அதன் தலைவர் மருத்துவர் கதிரவன் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் லதா அனைவரையும் வரவேற்றுப் பேசினார் அரசு பள்ளிகளை ஆதரிப்போம் அதன் ஒருங்கிணைப்பாளர் சொக்கன்கொல்லை பள்ளி தலைமை ஆசிரியர் அருணாச்சலம் ரோட்டரி சங்க சாசன தலைவர் சுதர்சன் உறுப்பினர் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளியில் முதல் வகுப்பு சேர்ந்த மாணவர் ஒருவருக்கு வெள்ளி நாணயம் ஊக்க பரிசாக வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பேனா பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை மருத்துவர் கதிரவன் வழங்கினார் விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மைக்கேல்ராஜ் திலகவதி சுகந்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சுசீலா எமிஸ் ஆசிரியை லட்சுமி சத்துணவு அமைப்பாளர் சசிகலா பெற்றோர்கள் உமா, ராஜேஸ்வரி, அருணா, விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.