புவனகிரி: பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம்

58பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 'சமகல்வி எங்கள் உரிமை' என்ற தலைப்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் துவக்கவிழா நடைபெற்றது. 

கடலூர் மேற்கு மாவட்டத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான க. தமிழ்அழகன் தலைமையில் புவனகிரி வெள்ளாற்றுப் பாலக்கரை அருகாமையில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மாவட்டம் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஆன வி.ஏ.டி. கலிவரதன் பங்கேற்று சிறப்புரையாற்றி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திடும் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். 

இதனைத் தொடர்ந்து புவனகிரிக் கடைவீதியில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்களிடம் மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்துகளை வாங்கி, துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். இதில் கட்சியின் நிர்வாகிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி