சேத்தியாத்தோப்பு அருகே சின்னநெற்குணம் கிராமத்திற்கு கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு அரசு பேருந்து இயக்கப்பட்டது. ஆனால் தற்போது கடந்த நான்காண்டுகளாக எந்த விதமான பேருந்து வசதியும் இல்லாததால் கிராமத்திற்கு உள்ளே இருந்து கிராம மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் என தினசரி நூற்றுக்கணக்கானோர் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து எறும்பூர் கிராம பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏறி செல்கின்றனர். இதனையடுத்து பலமுறை கிராமத்திற்கு பேருந்து வசதி வேண்டும் என கோரிக்கை வைத்து நிலையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் புறக்கணித்து வருகின்றனர். இதனை அறிந்து வேதனையுற்ற கிராம மக்கள் நாளை சாலை மறியல் நடத்தப்படும் என அறிவித்து போஸ்டர்களை ஒட்டினர். இதனையடுத்து இது குறித்து போராட்டத்தை தடுக்கும் விதமாக புவனகிரி வட்டாட்சியர் தனபதி தலைமையில் சேர்த்தியாத்தோகுப்பு உதவி காவல் ஆய்வாளர் வாசுதேவன் உள்ளிட்டோருடன் கிராம மக்கள் பேச்சு வார்த்தை புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேருந்து செல்லும் சாலை ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் ஆக்கிரமப்புகளை அகற்றுவதற்கும், அளவீடு செய்து அதற்கு பிறகு பேருந்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கிராம மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்காக 45 நாட்கள் கால அவசாக அவகாசமும் கோரப்பட்டது.