கடலூர்: கூடுதல் விலைக்கு மதுபான விற்பனை வீடியோ வைரல்

71பார்த்தது
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பு. ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது மேலும் பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் scan செய்தாலும் பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் கேட்பதாக கூறப்படுகிறது. மேலும் மது வாங்க சென்ற நபர் ஒருவர் கூடுதல் கட்டணம் கேட்டதால் தர முடியாது என கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது கடை வியாபாரி கூடுதல் கட்டணம் வசூலிப்பது இன்ஸ்பெக்டர் டிஎஸ்பி எஸ் பி அமைச்சர் வரை அனைவருக்கும் தெரியும் என்றும் நீ எங்கு வேண்டுமானாலும் போய் கூறிக் கொள் என்று பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது இந்த நிலையில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி