கடலூர் மாவட்டம் புவனகிரி கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வகொளஞ்சியப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நேற்று 3ஆவது நாள் சிறப்பு வழிபாடு ஹோம பூஜையுடன் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாள்தோறும் சுவாமிக்கு பல்வேறு வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.