ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் பாஜகவில் இணைந்த பின்னர், அவர்கள் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். தனது ‘X’ தளத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், “விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது. ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் பாஜகவில் இணைந்த பின்னர் மோடி வாஷிங் மிஷின் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறார்கள். இதுவரை 23 பேரின் ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மோடி - அமித்ஷா கூட்டணியின் செயல் ஜனநாயகத்திற்கு சாபமாக மாறி இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.