லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இன்று (டிச. 12) ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கூலி படத்தின் புதிய அப்டேட் வெளியாகிறது. மாலை 6 மணிக்கு வெளிவரும் அப்டேட் தொடர்பான டீசர் வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.