ராமநாதபுரம்: சாயல்குடி அருகே சொகுசு கார் மோதி நபர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழச்செல்வனூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற சாகுல் அமீது என்பவர் மீது, அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். முதுகு மற்றும் தலையில் பலத்த காயமடைந்த சாகுல் அமீது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.